இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஒரு ‘பொய்யர்’ என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சர்கொசி விமர்சித்துள்ளார். பிரான்ஸில் நடைபெற்ற ‘ஜீ 20’ மாநாட்டில் பங்கேற்கச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கேன்சில் நேற்று தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே சர்கோசி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நான் ஒருபோதும் அவரை பார்க்க விரும்பவில்லை. அவர் ஒரு பொய்யர்” என்று சார்கோசி, இஸ்ரேல் பிரதமர் பற்றி ஒபாமாவிடம் கூறியுள்ளார். இதற்கு ஒபாமா, “அவர் பற்றி நீங்கள் அருவருப்படைந்துள்Zர். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் அவருடன் தொடர்பு வைத்திருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.
அண்மையில் நடந்த யுனெல்கோ அங்கத்ததுவத்திற்கான வாக்கெடுப்பில் பிரான்ஸ், பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. அது பற்றி பராக் ஒபாமா, சர்கோசியிடம் கேட்டபோது அவர் இந்த பதிலை அளித்துள்ளார். இந்த உரையாடல் பற்றிய செய்தி பிரான்ஸ் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment