இருவருக்கும் இருக்கும் உள் கட்சி பிரச்சனையையால், மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கிய சண்டை இப்போது, ஈரோட்டின் தெருவெல்லாம் சென்று விட்டது.
கடந்த மாதம், 29-ம் தேதி துணை மேயராக கே.சி.பழனிசாமி பதவி ஏற்ற போது, அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மேயர் மல்லிகா மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த துணை மேயர் பதவி ஏற்பு விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும்,
சில விளம்பர தட்டிகளில் தன்னுடைய படம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி அந்த விளம்பர தட்டிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்திரனிடம் சத்தம் போட்டார்.
மேயர் உத்தரவுப்படி மேயர் படம் போடாத எல்லா தட்டிகளும் அப்புறப்படுத்தபட்டது.
அடுத்து அமைச்சர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஈரோடு உராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு செல்லும் சென்ற மேயர், அமைச்சரின் பின்னால் சென்று கொண்டே தன்னுடைய செல் போனில் யாருடனோ பேசிக்கொண்டு வந்துள்ளார்.
அதை கவனித்த அமைச்சர் ராமலிங்கம், “போன்ல யாருகிட்டம்மா” பேசிக்கிட்டே வந்துக்கிட்டு இருக்கிறாய்..? என்று கேட்டுள்ளார். செங்கோட்டையனிடம் பேசி முதல்வர் கிட்ட நான் நேரில் சென்று பேச “அப்பாயின்மென்ட்” வாங்கி கொடுக்க சொன்னேன் என்று முகத்தை கடுப்பாக வைத்துக்கொண்டு சொல்லியுள்ளார்.
அப்போது மேயருக்கு போடப்பட்டிருந்த நாற்காலி அமைச்சருக்கு பக்கத்தில் இல்லாமல் இருந்ததை பார்த்த அமைச்சர், அந்த நாற்காலியை எடுத்து தன்னுடைய நாற்காலிக்கு பக்கத்தில் போடும்படி அதிகாரிகளிடம் சொல்லியுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட மேயர் ஆம்மாப்பா... எல்லோரும் என்னுடைய “சீட்ட” தூக்கரதுலையே குறியா இருங்க.... என்று “கிண்டல்” அடித்துள்ளார்.
அடுத்த நாள் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்திரனுடன் நகர் வலம் சென்ற மேயர் தெருக்களையும், கழிவு நீர் குழாய்களையும், புதிதாக கட்டப்படும் பாலங்களையும் பார்வையிடுவது போல படம் எடுத்து தினசரி பத்திரிக்கைகளுக்கு கொடுத்துள்ளனர்.
துணை மேயருக்கு தகவல் சொல்லாமல் மேயர் நகர் வலம் சென்று வந்ததால் கடுப்பான துணை மேயர் கே.சி.பழனிசாமி தனது பரிவாரங்களுடன் அதுத்த நாள் நகர் வலம் கிளம்பியுள்ளார். மேயர் நகர் வலம் போனபோதும் கூடவே போன ஆணையாளர் பாலச்சந்திரன் துணை மேயர் நகர் வலம் போன போதும் கூடவே வந்துள்ளார். இதையும் புகைப்படம் எடுத்து தினசரிகளுக்கு கொடுத்துள்ளார் ஆனையாளர்.
மேயர், துணை மேயர் மோதல் “தெரு”வுக்கு வந்ததும் உஷாரான உளவுத்துறை இந்த மோதல் பற்றி கோட்டைக்கு தகவல் கொடுத்துள்ளது, கோட்டையிலிருந்து மாவட்ட ஆட்சியர் சண்முகத்துக்கு வந்த உத்தரவை தொடர்ந்து நேற்று மேயர், துணை மேயர், ஆணையாளர் என் மூவரையும் தனது அறைக்கு அழைத்து உடகாரவைத்த மாவட்ட ஆட்சியர் சண்முகம் கிட்டத்தட்ட மூவருக்கும் ஒருமணி நேரத்துக்கும் மேலாக “தண்ணி” காட்டியுள்ளார்.
மேயர் துணை மேயர் எப்படி நடந்து கொள்ளவேண்டும், ஆணையாளர் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் சொல்லி, அடுத்து இதுபோல ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன நடக்கும் என்பதை நான் முடிவு செய்ய முடியாது என்று மூவருக்கும் கோட்டையிலிருந்து வந்த எச்சரிக்கையை சொல்லி அனுப்ப்பியுள்ளார்.
பேயறைந்தது போல இருந்த முகத்தை, போராடி இயல்பு நிலைக்கு கொண்டுவந்திருந்த மூவரும் மாவட்ட ஆட்சியர் அறையிலிருந்து வெளியே வந்துள்ளனர்.
இனி மேயருக்கும் துணை மேயருக்கும் “தெரு”ச்சண்டை இல்லாமல் இருந்தால் சரி!


No comments:
Post a Comment