‘கோலிவுட் ஏஞ்சல்’ அசின் இப்போது பாலிவுட்டில் இறக்கைக் கட்டிப் பறந்தாலும் நம்மூர் மக்கள் மீது இன்னும் அதே பாசத்தோடுதான் இருக்கிறார். ஒரே நாள் ட்ரிப்புக்கு சென்னை வந்தவர் மும்பைக்குத் திரும்பி பறக்க முயன்றபோது இரண்டு நிமிட பேட்டியை முடித்தோம்.
உங்க அப்பா பத்திதான் அதிகம் தெரியுது. அம்மா பத்தி ஒரு பஞ்ச் சொல்லுங்க…?
அம்மா ஒரு டாக்டர். அப்பாவை மாதிரி அம்மாவும் என்னோட ரோல் மாடல். அவங்க என்னை ஒரு குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணினது இல்ல. ஒரே குழந்தையாக இருந்தாலும், அவங்க கொடுத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்தியிருக்கேன். அவங்க நம்பிக்கையை நான் காப்பாத்திட்டு இருக்கேன்.
உங்க வீட்டுல பெரிய லைப்ரரி வைச்சிருக்கீங்களாமே?
ஆமாம், அப்பாவோடது. சின்ன வயசுல இருந்தே அப்பா லைப்ரரிக்குப் போய் புத்தகங்கள் படிப்பேன். மலையாள இலக்கியங்கள், அரசியல், மதம், சைக்காலஜி, தத்துவங்கள் சம்பந்தமான ஏராளமான புத்தகங்களோட கலெக்ஷன் இருக்கு.
சின்னப் பெண்ணாக இருக்கும் போது அப்பா, “அதைப் படிக்க வேண்டாம், லைட்டாக இருக்கும் புத்தகங்களைப் படி”ன்னு சொல்வாங்க. ஆனாலும், நான் அப்பா புத்தகங்களைத்தான் படிப்பேன். ஷேக்ஸ்பியரோட ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துப் படிச்சப்ப அப்பாகிட்ட மாட்டிக்கிட்டேன். சிரிக்கிறார்.
இந்த நொடியில் உங்க மனசுக்குள்ளே ஏதாவது ஆசை இருக்கிறதா?
நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். எல்லாமும் இருக்கு. இதுவரை என்கிட்ட இல்லாமல் போனது…ம்ம்ம்ம்… வேலண்டைன் டேட்… ஆனால் இது ஒரு பெரிய பிரச்சினை இல்ல. அதனால வருத்தமும் இல்ல.
ரிலேஷன்ஷிப்ல மாட்டிட்டீங்களா?
நான் இதுவரை ரிலேஷன்ஷிப்ல இருந்ததே இல்ல. ரிலேஷன்ஷிப் இருக்கக்கூடாதுங்கிறது நானே தீர்மானமாக யோசித்து எடுத்த முடிவு. பதினான்காவது வயசுல இருந்தே மாடலிங் பண்ண ஆரம்பிச்சு, இப்போ சினிமாவுக்கும் வந்துட்டேன். இந்த நிமிஷம் வரைக்கும் என்னோட கவனம் சினிமாவுல மட்டும்தான் இருக்கு.
சரி, அப்படீன்னா யார் உங்க பாய் ஃப்ரெண்ட்?
நான் படிச்சது கொச்சியில இருக்கிற செயின்ட் தெரசா காலேஜ். அது லேடீஸ் காலேஜ். அதனால், என் வயசுல இருக்கிற பசங்க கூட பேசுறதுக்கான வாய்ப்புகள் அமைஞ்சதே இல்ல.
இப்ப சினிமாவுக்கு வந்த பிறகு இங்கே இருக்கிற ஹீரோக்கள்ல பல பேர் கல்யாணம் ஆனவங்க. இன்னும் சில பேர் என்னோட வயசுல மூத்தவங்க. அதனால பாய் ஃப்ரெண்ட்டுக்கு வாய்ப்பே இல்லாம போச்சு.
அங்கே மீடியாவை எப்படி சமாளிக்கிறீங்க?
அதுக்குன்னு ஒரு ஃபார்முலா வைச்சிருக்கேன். ‘நோ ஓவர் ரியாக்ஷன் = நிம்மதி’. இதுதான் என்னோட ஃபார்முலா ரகசிய
No comments:
Post a Comment