06.11.2011 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு கோவையில் அமைந்துள்ள வ.உ.சி பூங்கா மைதானத்தில் இம் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர். ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குனர் திரு. மணிவண்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் திரு. தியாகு, உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் இயக்கத் தலைவர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் இம்மாபெரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இம் மாநாடானது மூன்று அம்சக் கோரிக்கைகளின் அடிப்படையில் இடம்பெறவுள்ளது. அவையாவன….
1. மிகப் பெரும் இனப்படுகொலைக்கு உள்ளான ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களுக்காக நீதி கேட்டும்….
2. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர் உயிர்களை காப்பாற்ற வேண்டியும்…..
3. கொடும் துன்பங்களில் உழன்றுகொண்டிருக்கும் தமிழீழ மக்களுக்கு மறுவாழ்வு கோரியும்…..
இம் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது.
மூவர் வாழ்வுரிமை காப்போம்! ஈழத்தமிழர் இறையாண்மை மீட்போம்! எம் இனம் காக்க கரம் கொடுப்போம்! உரிமை முளக்கம் செய்திட உறவுகளே அணிதிரள்வோம்! அணிதிரண்டு அனைவரும் மாபெரும் எழுச்சி கொள்வோம்!
இந்தியாவின் மெளனத்தையும், உலக அரங்கின் மனச்சாட்சியையும் இம் மாநாட்டின் குரல் உலுப்பட்டும்.
இந்த மாநாடு தொடர்பாக கான குறிஞ்சி அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பையும் இத்துடன் இணைக்கின்றோம்.




No comments:
Post a Comment