பாமகவில் இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் வேல்முருகன். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் பா.ம.க. நிறுவனர் ராமதாசையும், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனையும் தரக்குறைவாக பேசியதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டவர்களை சுற்றுப்பயணம் செய்து சந்தித்து ஆதரவு திரட்டப்போவதாக அறிவித்தார்.
பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
வேல்முருகனையும் அவரது ஆதரவாளர்களையும் தங்கள் கட்சியில் சேர்க்க முன்னனி கட்சிகள் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் வேல்முருகன் புதிய கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
வருகிற 26-ந் தேதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் வேல்முருகன் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கட்சியின் பெயர் மற்றும் கொடியை பற்றி அவர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.


No comments:
Post a Comment