பாமகவிலிருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 27ம் தேதியன்று தனது புதுக் கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் போக்கையும், கட்சிப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து வேல்முருகன் கட்சியிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
கட்சியின் முன்னணித் தளபதிகளில் ஒருவரான வேல்முருகனுக்கு ஏற்பட்ட இந்த கதி பாமகவினரிடம் மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீக்கப்பட்ட வேல்முருகனை சேர்க்க கிட்டத்தட்ட தமிழகத்தின் அத்தனை பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக என பல கட்சிகளும் முயன்றன.
இருப்பினும் தனி இயக்கம் காண வேல்முருகன் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தனது புதுக் கட்சியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 27ம்தேதி தொடங்க வேல்முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபாகரன் பிறந்த நாள் மாவீரர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் வேல்முருகன் தனது புதிய கட்சியைத் தொடங்குகிறார் என்று கூறப்படுகிறது.


No comments:
Post a Comment