அதாவது பணத்தை முதலில் காட்டுங்கள் காரியத்தைப் பிறகு கதைப்போம் என்பதுபோன்ற கொள்கையுடையவர் சம்பந்தன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தனது குறிப்பில் எழுதியுள்ளதாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் மக்களின் ஆதரவினை யாருக்கு வழங்குவது என்பதனை நிர்ணயிக்கும் பிரதான சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போது அமைந்திருந்ததும் அங்கே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதா அல்லது சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதா என்பதனை சம்பந்தன் உடனடியாக தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரிடமிருந்து கூடுதலான சலுகைகளை பெற்றுக் கொள்வதில் சம்பந்தன் கூடுதல் நாட்டம் காட்டினார் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானது என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு சில தமிழ் தரப்புக்கள் சம்பந்தனிடம் கோரிய போதிலும் அது பயனற்ற முயற்சி என நிராகரித்துள்ளார் எனவும் விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதிர்வு


No comments:
Post a Comment