
இலங்கையின் சக்தி ரி.வி உரிமையாளர் இராஜ மகேந்திரனுக்கு நத்தார் பரிசாக எறிகல் ஒன்றை கொடுத்து உள்ளார் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
நேற்றைய தேர்தல் மூலம் கட்சியின் 2012 ஆம் ஆண்டுக்கான தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டு உள்ளார் ரணில்.
ஆயினும் அதிருப்தியாளர்கள் குழுவால் கட்சியின் தலைமைச் செயலகமாக சிறிகொத்தா மீது கல்லெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இன்று ரணில் அவசர அவசரமாக ஊடக மாநாடு ஒன்றை இங்கு நடத்தினார்.
இம்மாநாட்டில் சக்தி ரி.வி ஊடகவியாளரும் கலந்து கொண்டிருந்தார்.
நேற்று வீசப்பட்டு இருந்த ஒரு பெரிய கல்லை கையில் எடுத்தார் ரணில். இக்கல்லை இராஜ மகேந்திரனுக்கு நத்தார் பரிசாக கொடுக்கின்றார் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
சக்தி ரி.வி ஊடகவியலாளரிடம் கல்லை கையளித்தார்.


No comments:
Post a Comment