
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடுதியை இராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். பல்கலைக் கழகத்தின் பாலசிங்கம் ஆண்கள் விடுதியின் இருமருங்கிலும் தரித்து நின்று வீதியால் செல்பவர்களை இராணுவத்தினர் சோதனை செய்தனர்.
இந்தச் சம்பவம் இன்றைய தினம் மாலை ஏழு மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது. வழமைக்கு மாறாக இன்றைய தினம் மாலை இராணுவத்தினர் ரோந்தின் பொழுது விடுதியின் சூழலில் தரித்து நின்று சோதனையில் ஈடுபட்டனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பொழுது மாணவர்களும் வீதியால் சென்ற மக்களும் தடுத்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment