விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்த அவர், இலங்கையில் தமிழர்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் இலங்கை அரசை போர் குற்றவாளி என கண்டிக்கும்போது இந்தியா இலங்கையை தட்டி கேட்கவில்லை என்றும் பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சனை ஏற்படும்போது மாநில மக்களிடையே மோதல் ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது என்றும் குற்றம்சாற்றினார்.
விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது என்று கூறிய தா.பாண்டின், ஊழலை ஒழிக்க மக்களுக்கு ஆர்வம் உள்ளது ஆனால் ஆட்சியாளர்களுக்கு அறவேயில்லவே என்றும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவர்களது சுய லாபத்திற்குதான் ஆட்சி புரிகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
உணவு உறுதிப்பாடு சட்டம், மகளிர் மேம்பாட்டு திட்ட சட்டம், லோக் ஆயுக்தா சட்டம் போன்றவை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுவதுன் மூலம் மத்திய அரசு செயலற்று போய்விட்டது என்றார் தா.பாண்டியன்.
முல்லை பெரியாறு அணை பிரச்சனை மோதலினால் அப்பாவி மக்கள்தான் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று கூறிய தா.பாண்டியன், இந்த பிரச்சனையில் கேரளாவை நம்ப முடியாது என்றும் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தெளிவான ஒரு முடிவை எடுத்தாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment