
யாழ்மாவட்டத்தின் நகர சபை உறுப்பினரும் டக்கிளசின் கட்சியிலிருந்து விரட்டப்பட்டவருமான மனுவல் மங்களநேசன் மீது டக்கிளசினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இம்முறைப்பாடுகளை அவர் மனைவி தெருவிக்கையில்..
நேற்று வியாழக்கிழமை மாலை யாழ் நகரப்பகுதிக்கு வீட்டுத் தேவைக்காக பொருட்கள் வாங்க மோட்டர் வண்டியில் சென்ற வேளை யாழ் இச்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் வண்டிகளில் வந்த தலைக் கவசம் அணிந்து வந்த டக்கிளசு உறுப்பினர் சரமாரியாக பொல்லுகள் மற்றும் இரும்புக் கம்பிகளினால் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவரது மனைவி தெரிவித்தார்.
தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இத் தாக்குதல் குறித்து யாழ் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மங்களநேசனின் மனைவி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஈழ மக்கள் சனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அடிக்கடி மோதல்கள் வெடிப்பதும், ஆளையாள் கொலை செய்வதற்கு முயற்சிப்பதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமை வளக்கத்தனமாக குறிப்பிடத்தக்கதுதானே.?
இந் நிலையில் இத் தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படுமா என மங்களநேசனின் ஆதரவாளர்களிடம் எமது செய்திப் பிரிவு கேட்டபோது,
இது ஒரு சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாக அமைந்திருப்பதாகவும், அரசியல் ரீதியாக மோதுவதற்குப் பலமில்லாதவர்களின் செயற்பாடே இது எனவும் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் டக்கிளசினர் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் வெளியிட இருந்தபோதும், அதனைக் கண்டு அஞ்சியவர்கள் இவ்வாறு கோழைத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டனர்.


No comments:
Post a Comment