
என் தாய் மண்ணின் வணக்கம்,
ஐரோப்பிய தமிழ் மக்களுக்கு..
”உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தினை சேர்மனியில் திரையரங்கில் சென்று பார்த்த ஒரு அனுபவமுள்ள சகோதரன் எமக்கு எழுதிய கண்ணீர் மடல்…
இங்கே சேர்மனியில் இத்திரைப்படம் கிட்டதட்ட 3 நகரங்களில் இதுவரை திரையிடப்பட்டுள்ளது.
நான் திரையரங்கிற்கு செல்லும் போது மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் சென்றேன் ஆனால் அங்கே எனக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
திரையரங்கத்தில் வெறும் 6 பேர் மட்டுமே இப்படத்தினை பார்க்க வந்திருந்தனர்.
திரையிடப்பட்ட மற்றைய நகரங்களில் கூட ஆட்கள் மிக மிக குறைவு என்றுதான் கேள்விப்பட்டேன்.
சேர்மனியில் இதுவரை மொத்தமாக 25 பேர் மட்டுமே இப்படத்தினை பார்த்திருப்பார்கள் என்பது என் கணிப்பு.
இதே ரசனி, விசைய், சூர்யா என்றால் வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு திரையரங்கிற்க்கு செல்வோர் இங்கு அதிகம் இதில் தமிழீழத்தவர்களும் அடங்கும்.
எனினும் கூட விடுமுறை நாட்களில் படம் திரையிடப்பட்டும் திரையரங்குகளுக்கு வரவில்லையே!…?
எம் இனத்தை காலில் கிடக்கும் செருப்பாக கூட மதியாத நேரத்தில் எம் இனத்தின் துயரத்தை ஒருதன் பதிவு செய்திருக்கிறான்.!
உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட முனைந்த்திருக்கிறான்.!
அதற்க்கு நாங்கள் செய்யும் கைமாறு இது தானா..?
எம் மக்கள் எந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை நன்றாக புரிந்து கொண்ட ஐரோப்பிய வினியோகத்தர்கள் எல்லாம் தப்பிவிட்டார்கள்.
ஆனால் எம் மக்கள் ”ஈழப்பற்று, தனி ஈழம், தன்மானம், சுதந்திர வாழ்வு” என்று பேசுவதெல்லாம் வெறும் போலித்தனமான வேடமென தெரியாத சில வினியோகத்தர்கள் பாவம் தங்கள் கைக்காசுகளைப் போட்டு திரையரங்கத்திற்க்கு வாடகை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
(யாருமே இல்லாத திரையரங்கில யாருக்கடா படங் காட்றது?)
இந்த நிலை இருந்தால் எவன் இப்படியான உண்மை சம்பங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட முன் வருவான்..?
மாவீரர் நாளுக்கு இளம் தலைமுறையினர் எல்லாம் வந்து குவிவதைப் பார்த்து ” நம் பிள்ளைகளுக்கும் எமது தாயகத்திலும் மாவீரர்கள் மீதும் உள்ள அக்கறையில் தான் என தயவு செய்து நீங்கள் தான் தப்பாக கணக்குப்போட்டு விடாதீர்கள்,.
முகப்புத்தகத்திலும் ஸ்கப்பிலும் பேசிக்கொண்டவர்களின் நேரடி சந்திப்பிற்க்கான அரங்கமே அது தவிற அங்கே யாருடைய வீர உரைகளைக் கேட்ப்பதற்க்காகவோ உண்மையில் அஞ்சலி செலுத்துவதற்க்காகவோ வருவதில்லை.
வெறும் வெட்டிகளின் வேடத்தனமான செய்கை.
இது தான் மானம் கொண்ட மாவீர நாளில் நீலிக்கண்ணீிரின் பதில் இன்று தெளிவாத்தெரிகின்றது.
எமக்கு கருணா மட்டுமல்ல இங்கு இருக்கு பல ஆயிரக்கணக்கானவர்கள் தான் துரோகிகள்.
இனிமானம் என்று மண்ணாங்கட்டி மாவீர நாளை மானபங்கம் படுத்தி எங்கள் அகலத்திறந்த நம்பிக்கைக்கு நெருப்பால் வேக வைத்த துரோகத்தனவானவர்கள்.
இன்று தெளிவாக அறிந்தோம் எங்கள் குருதிக்கு பின் யாரல்லாம் துணை என்பதை உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தெளிவாக்கிவிட்டன.
இரவுகள் வந்தால் எவனோடும் எவளோடும் காமத்தை உண்டுகொள்ளவும் மற்றய நாட்களில் தெருக்களில் சாதாரணமாக செல்லும் போது கல்யாண வீடுகளுக்கு செல்வதை விட ஆடம்பரமாக கிளம்புகிறார்கள்,
எனக்கு தெரிந்து பெண்பிள்ளைகள் ஒரு மாசத்திற்க்கு முன்பே எந்த சாறி உடுப்பது எந்த நகைகள் போடுவது என்று திட்டம் போடுகிறார்கள்.
ஏன் ஒரு கதைக்கு கைத்தொலைபேசிகளுக்கு மாவீரர் அரங்கத்துள் தடைவிதித்துப் பாருங்கள் எத்தனை பேர் அரங்கத்துள் இருப்பார்கள் என்று? ”
கேவலம் கெட்ட இனமானம் உயிருடன் இருப்பது அவசியம் இல்லை..
செத்து தொலைவது கட்டாயமாக்கட்டும் இனி ஒரு சந்தர்ப்பங்களிலாவது.!
புனிதவதி என்னும் உடன்பிறவா தங்கைக்கு நடந்த அநீதி,
அதை அறிய எம் இனமே திரண்டு வா நீ ”- என்று கூறியும் யாரும் வரவில்லையே..?
”வேட்டைக்காரன்” திரைப்படம் திரையிடப்படும் போது ஈழப்பிரச்சனையை கிழப்பிய எவனையும் கூட இந்த திரைப்படம் திரையிட்ட தியேட்டர்களில் காணவில்லையே…..?
இதுவரை இத்திரைப்படத்தினை பார்க்காத அனைவருக்கும் சொல்கிறேன் ”
இனிமேல் யாரும் ”ஈழத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு எந்த சினிமாப் படங்களுக்காவது எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி பிடிப்பானாயிருந்தால் அவன் முகத்தில் விழுகிற முதல் உமிழ்நீர் என்னுடையதாகத் தான் இருக்கும்”
உன்னுடைய ஈழப்பற்றை நீ “ உச்சிதனை .முகர்ந்தால்” போன்ற நல்ல படங்களுக்கு முதலில் திரையரங்கிற்க்கு வந்து காட்டு பிறகு மற்றப்படங்களுக்கு எதிர்ப்புக்காட்டு.!
நீங்கள் ஆயிரம் சொன்னாலும் தமிழ் நாட்டுத்தமிழர்கள் தான் எமக்காகவும் எம் மக்களுக்காகவும் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லா தமிழகளினது முகப்புத்தகத்தினையும் அவதானித்துப் பாருங்கள்..
இருந்தா ‘தமிழ்ச் சாதியே உன் தலைவிதி இதுதானா இப்படித்தானா’..?
என்று உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு வினா எழுப்பி இருக்கிறார் புகழேந்தி தங்கராச்::
அதற்க்கு பதில் என்ன என்பது இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மானங்கெட்ட நாய்களுக்கு இடுப்பையும் தொப்பிளையும் தெடையும் பின் அங்கத்தையும் மார்பின் முலைகளையும் அசைச்சு அரை அம்மணமாக காட்டினாத்தான் வருவார்கள் என்றால் இந்த மானங்கெட்ட போலித்தமிழினமே செத்து நாசமாப்போக இன்னொரு அரக்கன் எதாவது வளியிலாவது கொண்டு செத்து தொலைக்க கடவது.
இதைப்படிக்கிறவர்களுக்கு தன் மானம் இருத்தல் அவசியம் இல்லையேல் வாசிக்க வேண்டாம்
இது தன் மானவனுக்கு எழுதும் கடிதம்.
நன்றி.
Omar Nabil Nannan Mohamed
விழி வானலை யாழகிலன்


No comments:
Post a Comment