
யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லத்தக்க டக்கிளசின் போக்குவரத்து தனியுடமை வண்டி நெடுந்தீவுக்கு ஏன் போகாதாம்..?
நெடுந்தீவுப் பகுதியில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் இரண்டு பயண ஊர்திகளில் ஒன்று கடந்த ஒரு மாத காலமாகப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடாதுள்ளதால் நெடுந்தீவு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சில நாட்களாக பயண வண்டியின் சில்லுகள் காற்றுப்போய்விட்டது எனக்கூறி பயண சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் பின்னர் சாரதி இல்லை எனக்கூறி பல ஆயிரம் சாட்டு போக்குகளை சொல்லி பயண வண்டிச் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
குறித்த பயண வண்டி இன்னமும் தனது சேவையை ஆரம்பிக்கவில்லை எனவும் அதனால் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்குமாறு மகிந்தர் தமக்கு அறிவித்திருப்பதாக கூறியிருந்தார்.
கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நெடுந்தீவில் அரசாங்க கட்சி அதிக வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றியீட்டியது.
அம்பாந் தோட்டை மாவட்டத்தில் அரசாங்க கட்சி அடைந்த வெற்றியின் போது கிடைத்த விகிதாசார வாக்குகளை விட நெடுந்தீவில் அரசாங்க கட்சிக்கு கூடுதலான விகிதாசார வாக்குகள் கிடைத்திருந்தமை யாவரும் அறிந்ததே.
அத்துடன் வட பகுதியின் அபிவிருத்தியில் அதிக ஆர்வத்துடன் பணிகளை மேற்கொண்டு வரும் பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராசபக்ச அவர்களும், நெடுந்தீவின் அபிவிருத்திக்காக 50 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதெல்லாம் வெறும் பேச்சளவிலும் ஊடக செய்திகளுக்கும் மட்டும்தானா என பிரதேச வாசிகள் கேள்கள் எழுப்புகின்றனர்.
அபிவிருத்தியென ஒதுக்கப்படுகின்ற பணம் எங்கே போகின்றது என தாம் குழப்பமடைந்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அப்படி என்றால் பணய வண்டி எந்த வீடுகளுக்கு போகுகின்றது எனஅறிய முடியும் அல்லவா.?


No comments:
Post a Comment