
பொய்கள் எப்போதும் செல்லுபடியாகாது என்பது இது ஒரு பாடம் காட்டியது மகிந்தருக்கு..
மகிந்தரால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்காவும் நிராகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமையவில்லை என்று அது தெரிவித்துள்ளது.
கடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முழுமையான பதில் அளிக்கப்படவில்லை''
என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட் அம்மையார் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கை அர்த்தமற்றது என்று கூறி தமிழர்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே நிராகரித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இந்த அறிக்கை பக்கச்சார்பானது, முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தத் தவறியுள்ளது என்று கூறி நிராகரித்துள்ளன.
இந்த நிலையிலேயே அமெரிக்காவின் கருத்தும் வெளியாகி உள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் முழுமையாகப் பதிலளிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
வோசிங்டங்னில் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட்அம்மையார் தெரிவித்ததாவது:
நல்லிணக்க ஆணைக்குழு ஊடக சுதந்திரம், நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு, படைக்குறைப்பு, காணாமற்போதல்கள் போன்ற விடயங்களில் சில உருப்படியான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதேவேளை, நாங்கள் முழுமையான அறிக்கையை ஆய்வு செய்கிறோம்.
ஆனாலும், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு இந்த அறிக்கையில் முழுமையாகப் பதிலளிக்கப்படவில்லை என்பதை நாம் கூறியேயாக வேண்டும். குற்றச்சாட்டுக்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான விரிவான திட்டம் ஒன்றை முன்வைக்க ஆணைக்குழு தவறியுள்ளதால், உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இது குறித்து அறிக்கை முழுமையாக இல்லாது போனாலும், இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசிடம் நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கையர்கள் இந்த விவகாரங்களில் முழுமையாகப் பதிலளிக்க வேண்டும் என்பதையே நாங்கள் நீண்டகாலமாகக் கூறி வருகிறோம் என்றார் அவர்.அதேவேளை, இலங்கை மீது அனைத்துலக விசாரணை தேவைப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த விக்ரோரியா நூலன்ட், "அவர்கள் முன்னோக்கிச் செல்கிறார்களா என்று பார்ப்போம்'' என்று பதிலளித்துள்ளார்.
ஆனால், ஆணைக்குழுவின் அறிக்கையில் நம்பிக்கையீனத்தை வெளியிட்டுள்ள தமிழ்க் கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களும் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் என்று கூறியுள்ளது.
நீதிக்கு முன் அவசியம் எந்த அமைப்பாக இருந்தாலும் அத்தனை பேரையும் காலம் பளி தீர்த்தே ஆகும்.
இதில் எந்த நாடு என உள்ளதோ அந்த நாடும் தமிழினக்குருதிகளால் தண்டிக்கப்படுவது உறுதி.!


No comments:
Post a Comment