
எங்கள் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக எங்கள் நம்பிக்கை நட்சத்திரமாக எம்முடன் ஒன்றாகப் பயணித்த பன்னாட்டு தேசத்தின் குரலாய் ஒலித்த அண்ணன் உயர் திரு அன்ரனி பிரான்சிஸ் அவரது மறைவு எம்மை மட்டும் அல்லாது அனைத்து ஊடகத்கத்தாருக்கும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி நிற்கின்றது.!
என்றைக்கும் எப்போதும் கொள்கையில் பிடிப்புடனும் எங்கள் தாய்மண்ணின் விடுதலைக்காய் வேட்கைக்கு தம்மை அர்ப்பணித்த வீர மறவர்களைப்போல் தன் இனமானமுள்ள வீரனாக எம்மினத்தின் மீது தொடர்ந்து இன அழிப்புக்களை நடத்தி வந்த போது எதிர்த்து துணிந்து நின்ற ஒரு ஊடகப்போராளிகளில் பிரான்சிஸ் மாமா அவர்கள் என்பது எமது தாயகம் கொடுத்த வரமாகக்கருதுகின்றோம்.
எஙகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளையும் நியாயங்களையும் வெளிச்சப்படுத்தி தமிழ்தேசியத்தின் கருத்துக்களையும் இடைவிடாது எதிர் நீச்சல் போட்டு எடுத்துரைத்தின் மூலம் தனது தேசியப்பணியை எமது புலம் பெயர்ந்த அனைத்து உண்மைத்தளங்களில் மிகவும் நேர்த்தியாக முன்னெடுத்துச்சென்ற அண்ணன் அன்னாரின் உயிர்பிரிவு என்பது இன்றைய காலத்தின் கட்டாயத்தில் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் எமது தமிழீழவிடுதலைப் போராட்டத்துக்குமான ஒரு பேரிழப்பாகவே கருதுகின்றோம.!
எங்கள் இறிதிப் போராட்டம் வைகாசி மாதம் கடந்த 2009 ஆம் ஆண்டில் மிகப்பெரிய இழப்புக்களைச் சந்தித்த போதிலும் சற்றேனும் தளராத மன உறுதிப்பாடுடன் நம்பிக்கை தளராது தேசகடமையை ஆற்றிய அன்னாரன் அண்ணனின் பணி தொடரவேண்டி கட்டாயத்தில் தள்ளப்பட்டபேதிலும் எம் மக்கள் மீதும், எம் மண் மீதுமான இன அழிப்பு ஆக்கிரமிப்பு தீவிரமடைந்த அவ்வேளையில், எம் விடுதலைப் போராட்டத்துக்கான உண்மை நிலை நியாயங்களும் வலுவடைந்துகொண்டே வருகின்றதிற்கு நாட்டுப்பற்றாளர் திரு பிரான்சிஸ் போன்ற ஊடகப்பணியானது உன்னத மாகவும் இன்றியமையாத வகையில் இருந்துள்ளது.
இன்றய காலத்தின் கட்டாய சதிக்குள் பல்லாயிரம் எதிர்ப்புக்கள் வரினும் துணிந்து நிற்க புலம்பெயர் மண்ணில் அன்னாரின் பணி போன்றதை செய்வதற்கு பலர் முன்வரவேண்டும். அதுவே தான் அவருக்கு இனியும் நாங்கள் செய்ய வேண்டி நன்றிக் கடனாக இருக்க முடியும்.
பிரிவைத்தாங்காத எமது உறவுகளுடன் அனைவரும்அன்னாரின் மறைவுக்குள் துயருரும் அவரது குடும்பத்தினருடனும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைத்து ஊடகப்பணியாளர்கள் சார்பிலும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி- தேசம் கடந்தாலும் எங்கள் குரலாய் ஒலிக்கும் தமிழ் அருவி வானொலி.


No comments:
Post a Comment