
தாயக மொழியாலும் தமிழினத்தின் மேன்மையாக வீரக்கொடி புலிக்கொடி ஏறிய எங்கள் தாயகத்தமிழீழ மண்ணில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற “உறவுப் பாலம்” நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசியக் கொடியை ஏற்றிய சமயமே இவ்வாறு தேசிய கீதம் ஒலித்தது. இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் முகமாக நேற்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
அரச கருமமொழி அமுலாக்கம் குறித்த நாடாளுமன்றிலும் மற்றும் நிகழ்வுகளிலும் அடிக்கடி கூறிவரும் அமைச்சர் வாசுதேவ கலந்து கொண்ட இந்த நிகழ்விலேயே சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தமை அங்கு வந்திருந்த பலரையும் அதிருப்தியுற வைத்தது.
இதேவேளை, “வடக்கு கிழக்கில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் மொழியில் தாராளமாகப் பாடலாம்” என்று பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் யோன் சென விரத்ன நாடாளுமன்றில் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள், யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி எவ்.மகாலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது பெற்றோரை இழந்த 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பணத்தாலும் முடக்கி வறுமைக்கு உண்டு பண்ணி மனிதாபின முறையைக்கையாண்டு அடக்கி ஆண்டு கொண்ட அரக்கர்கள் தங்கள் தேசிய கீதம் சிங்களம் அதை யாழ்மண்ணில் ஒலிக்க சிங்கக்கொடி பறக்க வைக்க வேண்டும் என்ற மொழி தேசியத்திணிப்புக்கள் வன் முறையின் அடித்தள அத்தியாயம் தானே..?
இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் அங்குள்ள பச்சோந்தித்தனமாக தமிழின ஆழும் அமைச்சர்களும் தான் காரணி.
இதைக்கவனத்தில் எடுக்க வேண்டிய பொறுப்பாளர்கள்-எடுத்தால் தகுந்த பதில் கொடுக்க உதவியாக இருக்கும்.!


No comments:
Post a Comment