யாழ் மாநகர சபை உறுப்பினரும் ஈ.பி.டி.பி. கட்சியிலிருந்து விரட்டப்பட்டவருமான மனுவல் மங்களநேசன் மீது ஈ.பி.டி.பியினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.இச் சம்பவம் தெடர்பாக அவரது மனைவி கருத்து தெரிவிக்கும் போது,
இன்று வியாழக்கிழமை மாலை யாழ் நகரப்பகுதிக்கு வீட்டுத் தேவைக்காக பொருட்கள் வாங்க மோட்டர் சைக்கிளில் சென்ற வேளை யாழ் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் தலைக் கவசம் அணிந்து வந்த ஈ.பி.டி.பியினர் சரமாரியாக பொல்லுகள் மற்றும் இரும்புக் கம்பிகளினால் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவரது மனைவி தெரிவித்தார்.
தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இத் தாக்குதல் குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மங்களநேசனின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்
இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அடிக்கடி மோதல்கள் வெடிப்பதும், ஆளையாள் கொலை செய்வதற்கு முயற்சிப்பதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இத் தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படுமா என மங்களநேசனின் ஆதரவாளர்களிடம் எமது செய்திப் பிரிவு கேட்டபோது,
இது ஒரு ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாக அமைந்திருப்பதாகவும், அரசியல் ரீதியாக மோதுவதற்குப் பலமில்லாதவர்களின் செயற்பாடே இது எனவும் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் வெளியிட இருந்தபோதும், அதனைக் கண்டு அஞ்சியவர்கள் இவ்வாறு கோழைத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டனர்.


No comments:
Post a Comment