
என்றைக்கும் இன்றைக்கும் சிங்க அரக்கத்தனத்தின் ஆட்சியுள்ள இலங்கை என்பது வன வதைக்காடு தான். அதில் மக்கள் தான் மகிந்தவின் சிறைகளுக்கு அடங்க வேண்டும். என்ற விதி விலக்குள்ள தமிழீழ மக்கள் வாழும் இடங்களில் இராணுவ முகாம்களை ஒருபோதும் அகற்றமுடியாது என மகிந்தர் கூறுகின்றான்.!
தேசிய பாதுகாப்புக்காக மாவட்டங்கள் தோறும் இராணுவ முகாம்கள் இருக்கவேண்டும். அவற்றை எக்காரணம் கொண்டும் அகற்றமுடியாது.இவ்வாறு மஹிந்தர் பகிரங்கமாகவும் ஆணித்தர மாகவும் நாடாளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று வரவு செலவுத்திட்ட விவாதங்களுக்குப் பதிலளித்து இறுதி உரையாற்றிய போது தான் மகிந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:
இன்றைய விவாதத்தில் உறுப்பினர்கள் நிதி அமைச்சு தொடர்பாகப் பல கேள்விகளை முன்வைத்தனர். அது தொடர்பில் தை மாதம் பதில் வழங்குமாறு நான் நிதி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
எமது வரவு செலவுத் திட்டத்தை 64 வீதமானவர்கள் ஆதரித்துள்ளனர். இதற்கு இருக்கின்ற எதிர்ப்பையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த வரவு செலவுத்திட்டத்தை சரியான முறையில் விவாதிக்க, அதில் உள்ள குறை நிறைகளை சரியான முறையில் எடுத்துவைக்க எதிர்க்கட்சியால்முடியாமல் போயுள்ளமை கவலை தருகின்றது.
நாடாளுமன்றத்திற்குப் பதில் கூறும் அரசை வழிநடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்.
மக்கள் மனரீதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமைத்துவத்தை இனியாவது ஏற்று செயற்பட எதிர்க்கட்சி முன்வரவேண்டும். அதை புரிந்த நடத்தல் எதிர் கட்சியின் கடமை.
புலிகளைப் புனரமைப்பதும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதும் நாம் பிரசாரங்களை மேற்கொள்வதற்காக அல்ல.
எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்பதற்கே இப்படிச் செய்கிறோம் என்றான் மகிந்தர்.!
மேலும்...
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வாகனங்களை வாங்க விரும்பும் ஊடகவியலாளர்கள் கடன்களைப் பெறுவதற்கு 25 வருட தொழில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் கூறியிருந்தோம்.
இப்போது 18 வருடங்களாக அந்தக் கால எல்லையைக் குறைத்துள்ளோம்.
நியோ லிபரல்வாதம் என்று எதிர்க்கட்சி இந்த வரவு செலவுத்திட்டத்தைச் சுட்டிக்காட்டியது. அதையும் கவனத்தில் எடுத்துள்ளோம்.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக நாம் அரச செலவில் நான்கில் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளோம்.
இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்துள்ளோம். நியோ லிபரல்வாத பொருளாதாரக் கொள்கை இப்படிப்பட்டதல்ல.தனியார் முதலீடு 23.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
வறுமை 9 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
என்பதை அனைவரும் அறிய வேண்டும்.!
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இப்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையையும், அரசியல் தீர்வைக் காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையும் அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும்,
நாட்டை வளமானதாக மாற்றுவதற்கும் நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் மனநிலையில் இருந்து விடுபட்டு தேசிய அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும். அதற்காக எம்முடன் கைகோத்து செயற்பட நாம் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
தேசிய பாதுகாப்புக்காக மாவட்டங்கள் தோறும் இராணுவ முகாம்கள் இருக்கவேண்டும்.
அவை தேசிய பாதுகாப்புக்காகவே உள்ளன. அந்த முகாம்களை ஒருபோதும் நீக்கமுடியாது என கண்களில் குருதி கனல் பொங்க உரக்க மிட்டார் மகிந்தர்.
அத்துடன்..
இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து பலமான எதிர்க்கட்சியை உருவாக்கி அரசை அமைக்க புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சக்தி கிடைக்கவேண்டும் என நான் பிரார்த்தனை செய்கின்றேன் என்றார்.
என எதிர்கட்சியை உசுப்பிவிட்டது எதிர்கட்சிகளில் முகத்தை திரும்பக்காண முடிந்தது.!
எவை எப்படி என்றாலும் இராணுவ முகாம்களை நீக்க முடியாது என்பது பலகீனத்தை உருவாக்கும் என்பதை தெளிவாக மறை பொருளாக விமர்சித்தமை சிங்கள அரசை நாம் ஏறி மிதித்துத்தான் இருக்கின்றோம் அதை பல மாக மிதிக்க இன்னமும் சில காலம் தேவையில்லை விரைவில் பலகீன வாதியாக மாற்ற முடியும் என்ற துணிவு எழுகின்றமை குறிப்பிடத்தக்க உண்மை.!


No comments:
Post a Comment