
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனால் யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
1984ம் ஆண்டில் இந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மூடப்பட்ட போதும் தற்காலிகமாக திருநெல்வேலியில் இயங்கி வந்தது.
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அதிகாரபூர்வமாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது.


No comments:
Post a Comment