
இன்று வரை மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் அரசின் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வருடங்களாவது ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராசபக்ச பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்தபோதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அமைச்சர், புலிகள் இயக்கத்தினர் தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறினர் ஆனால், தமிழ்க் கூட்டமைப்பினரோ தாமே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் போல் நடந்துகொள்கின்றனரென்றும் விசனம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:..
அரசு கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சு புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சை விட வித்தியாசமாக இருக்கிறது. புலிகளை விட இவர்கள் கடும்போக்குக் கொள்கையுடன் இருக்கின்றனர்.
திம்பு பேச்சிலிருந்து போர்நிறுத்த ஒப்பந்தம்வரை புலிகள் நாடகமாடியதாகவும். குண்டுவெடித்தபோதும், சண்டைகள் நடந்தபோதும் திரைமறைவிலிருந்து புலிகள் செயற்பட்டாலும் ஆட்சியாளர்களுடன் அடிக்கடி பேச்சுகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், கூட்டமைப்பினர் அப்படியல்ல. புலிகளிலும் பார்க்க மோசமாகவே இருக்கின்றனர் என்று தெருவித்தார்.
அவர் மேலும் …
நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பது அவர்களுக்கு சரியான களம். இது சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும், கூட்டமைப்பிற்குமான பிரச்சினை அல்ல. இது தேசிய பிரச்சினை. இதனைப் பகிரங்கமாகப் பேசவேண்டும். தெரிவுக்குழுவிற்கு சென்று இருதரப்பும் பேசவேண்டும்.
இந்த நிலைமை தொடர்ந்தால் மக்கள் கூட்டமைப்பை ஒரு காலத்தில் வெறுப்பார்கள்.
நிபந்தனைகளை எவரும் முன்வைத்தால் தீர்வுப்பேச்சு வெறும் பேச்சாக மாறிவிடும். கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ் ஊடகங்கள் வலியுறுத்தவேண்டும். பேச்சில் முறையாக ஈடுபடாவிட்டால் கூட்டமைப்பு தமிழருக்குத் தீர்வு தேவையில்லையெனக் கருதுகிறதா.?
தீர்வு கிடைத்துவிட்டால் தங்களால் அரசியல் நடத்தமுடியாதெனக் கருதுகிறதா.?
அல்லது தங்களால்தான் தீர்வு கிடைத்தது, தீர்வு கிடைப்பதற்குத் தாமே ஒத்துழைத்தார்களென கூறிக்கொள்வதற்கா இப்படிக் கூட்டமைப்பு இழுத்தடிப்பு செய்கிறது.?
தமிழரின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று புலிகள் கூறினர். ஆனால், ஏக பிரதிநிதிகள் போல் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். கடந்த தேர்தல்களைப் பாருங்கள். வடக்கில் கூட்டமைப்பினரைவிட அதிகமான வாக்குவீதம் தேசியக் கட்சிகளுக்கே கிடைத்தன.
குறைந்தபட்சம் அபிவிருத்தித் திட்டங்களில் கூட எம்முடன் ஒத்துழைக்க கூட்டமைப்பினர் மறுக்கின்றனர். எமது அபிவிருத்தித் கூட்டங்களில் கலந்துகொள்ள கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குக்கூட அனுமதி இல்லை.
அப்படி அவர்கள் வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். கக்கீம், தொண்டமானை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தமது மக்களுக்கு சேவையாற்ற அரசுடன் இணைந்து செயற்படவில்லையா? தேர்தல் காலங்களில் அவர்கள் தமது கொள்கைகளை முன்வைத்து மக்களிடம் செல்கின்றனர்.
கூட்டமைப்பு அரசுடன் இணையமுடியாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற இணக்கமாக செயற்படலாமல்லவா.?
குறைந்தபட்சம் 2,3 வருடங்களுக்காவது அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு மக்களின் வாழ்வில் விமோசனத்தை ஏற்படுத்த முன்வாருங்கள்.கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைவர்மார் நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதங்களில் ஆற்றிய உரைகளை நான் பார்த்தேன்.
அந்தந்த அமைச்சுகள் பற்றி சரியான விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஆனால், இன்றைய கூட்மைப்பு எம்.பிக்களைப் பாருங்கள். விளையாட்டுத்துறை அமைச்சு விவாதத்தில் குற்றவிசாரணை பற்றியும், விவசாய அமைச்சு விவாதத்தில் கொள்கைகள் பற்றியும், பொருளாதார அமைச்சு விவாதத்தில் வேறு விடயங்கள் பற்றியும் பேசுகின்றனர். இது கவலைக்குரியது என்றார்.
———————————————————————–
எவை எப்படி என்றாலும்..
விடுதலைப்புலிகள் என்பது ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு வானத்தில் இருந்து இனமாக வாங்கிய ஆயுத தாரிகள் அல்லர். சரியான இலக்கை அடைய பயிற்று வித்து திறம்பட நடக்க அதி சிறந்த வீரனாக உருவாக்கப்பட்டனர். அவர்களின் விடுதலைப்போராட்டம் விடுதலை அடைந்தாலும் அவர்கள் மக்களாக சாதாரணமாக வாழ்ந்தாலும் எங்கள் வீரர்களாகவே போற்றப்படுவார்கள்.
இதை தலைவரும் அன்றய நாளில் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
இன்று மருவலாகி விடுதலைப்புலிகள் என்பது ஒரு அமைப்பாக மாற்றியுள்ளனர்.
அவைதான் இன்று நாம் சரிந்து நிற்க காரணிகளாக இருந்தது.!
இதை இன்று பலர் அறியவேண்டும். அதில் குறிப்பிடும் படியாக பன்னாட்டில் உள்ள உறவுகள் கவனத்தில் அவசியம் கவனிக்க வேண்டும்.!
எமது விடுதலைக்கு ஒவ்வொரு தமிழனும் எழுந்து தனது மண் என எழுந்தவனும் எமக்கு போராளி தான். போராட்டம் என்பது பல வகையில் உருவெடுக்கப்படும். அதில் போராடும் முறையாளர்கள் தங்கள் பலத்தை தகுதிக்கு ஏற்றவாறு போராடி வென்று கொள்ள ஒத்துழைப்பது தேசிய தமிழின மக்கள் கடமை என உணரும் வரை விடுதலைப்போராட்டம் வலுப்பெற்று எழுந்து விடாது.
தனது சதிக்கு ஏற்றது போன்று தனது மண் இனம் மொழி என உணருகின்றவர்கள் அத்தனை பேரும் இணைவது தான் விடுதலையுள்ள கடசிப்பயணங்களாக உள்ளது. இதை அனைத்து ஊடகங்களும் கவனம் எடுத்து மக்களுக்கும் பிற அமைப்பாளர்களுக்கும் இயக்க கட்சியாளர்களுக்கும் தெளிவுபடுத்தும் என நம்புகின்றோம்.!!!


No comments:
Post a Comment