
எம்.ஆர்.அசோசியேட் நிறுவனத்தின் தலைவரும் ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவராகச் செயற்பட்டவருமான அந்தோனி ராஜா வேலுபிள்ளை (வயது 53) இன்று மாலை காக்கைத்தீவு பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து தமிழ்த் திரைப்படங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் இவர் பிரபல வர்த்தகரும் முகவருமாவார். இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விரு தினங்களுக்குள் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் காக்கைத்தீவிலுள்ள அவரது வீட்டிலிருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment