இணையத்தளமொன்றுக்கு அதனது டொமைன் பெயர் மிக முக்கியமாகும். இணையத்தள வருகையாளர்கள்
நினைவில் வைத்திருந்து மீண்டும் உங்கள் தளத்திற்கு வருமாறு இலகுவான பெயராகவும் அதே நேரம் உங்களுக்கு பிடித்த பெயராகவும் டொமைன் பெயர் இருப்பது மிக முக்கியமாகும். எனினும் விரும்பிய டொமைனை வாங்குவதற்கு கிரடிட் காட் அவசியம் என்று இருந்த காலம் போய் தற்போது, இந்திய பாவனையாளர்களுக்கு நற்செய்தியாக தற்போது கிரடிட் கார்ட்டு இல்லாமல் டொமைன் பெயர் வாங்கமுடிவதாகும். இது தொடர்பில் விரிவான பதிவாக பலேபிரபு தனது தளத்தில் தகவல்கள் தந்துள்ளார். மீள் பிரசுரம் செய்ய அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்து இங்கே மீண்டும் பிரசுரிக்கின்றோம். 4தமிழ்மீடியா குழுமம்
கஸ்டம் டொமைன் என்பது நிறைய பேரின் விருப்பம். பிளாக்கர் மூலம் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு வேண்டும், இன்னும் சிலவற்றுக்கு டெபிட் கார்டு வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் வாங்க வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. எப்படி என்று எல்லோரும் கேட்கிறீர்களா? பதிவை படியுங்கள்.
நான் முன்னர் எழுதிய Custom Domain குறித்த பதிவுகளுக்கு நிறைய பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியுமா என்று கேட்டனர், நான் அப்போது கூறிய பதில் ஆம். ஆனால் நண்பர் தமிழ்கிழம் ஜெயச்சந்திரன் அதெல்லாம் தேவை இல்லை, நான் அவை இல்லாமல் வாங்கி உள்ளேன் என்று சொன்னார்.
தமிழ் பதிவுலகத்துக்கு புதியவரான அவர் இதோ என் வலைப்பூவில் முதல் முறையாக Guest Post எழுதி உள்ளார். இது நிறைய பேருக்கு கண்டிப்பாய் தேவைப்படும் ஒன்று. இதோ பதிவு அவரின் நடையில்,
அன்பு வாசகர்களுக்கு தமிழ்கிழத்தின் கனிவான வணக்கங்கள். பல இடங்களில் தமிழர்களின் மூளை விரயமாவதைத் தவிர்க்க, தமிழர்களின் ஒற்றுமையை நிலை நாட்ட முதல் முயற்சியாக இன்று நண்பர் பிரபு கிருஷ்ணா அவர்களின் வலைப்பூவில் முதல் முறையாக விருந்தினர் பதிவு எழுத வந்திருக்கும் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பி இன்றைய பதிவுக்கு செல்வோமா...
நம்மில் பலருக்கு Custom Domain வாங்க வேண்டும் என்று வெகு நாள் ஆசைப்பட்டிருப்போம். ஆனால் online purchase-இல் இருக்கும் சிக்கல்களினாலோ அல்லது credit/debit கார்டு இல்லாத காரத்தினாலோ அதை வாங்காமல் இருந்திருப்போம்.மேலும் google மூலம் வாங்க விரும்பினால் Debit கார்டு-டெல்லாம் செல்லாது,கண்டிப்பாக international credit கார்டு வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்று நான் சொல்லப்போகும் வழிமுறையை பயன்படுத்தி எந்த ஒரு சிக்கலும் இன்றி நீங்கள் விரும்பிய domain-ஐ offline-இல் bigrock மூலம் சுலபமாக வாங்கலாம் (பல registrar-கள் offline முறையை வைத்திருந்தாலும் நான் பரீட்ச்சயப்பட்டது bigrock-இல் தான்).
முதலில் www.bigrock.in சென்று உங்கள் domain பெயரை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் கணக்கு இல்லயேல் புதிதாக ஒரு கணக்கு துவங்கிக்கொள்ளவும். அதன் பின்னர் உங்கள் bigrock வலைதளத்தில் Select Your Payment Method என்ற இடத்தில் தங்கள் நாட்டை தேர்வு செய்து pay offline என்பதை சொடுக்கவும்.
No comments:
Post a Comment