காலத்தின் தெரிவே! - தமிழர் எதிரிகளின் எதிரே ! சாமான்யர்களால் புரியப்படாத அரசியற் புதிரே! அனுபவப் பழமே சம்பந்தரே வருக!நம் சந்ததியைக் காக்க ! வருக வருக கனடா வருக
தங்கள் வரவு நல்வரவாகுக!!!
அமெரிக்க தேசம் பிற நாட்டுத் தலைவர்களை அழைப்பதுண்டு
அரச அமைச்சர்களைச் சந்திப்பதுண்டு
எதிர்க் கட்சித் தலைவர்களுடனும் பேசுவதுண்டு
இதில் எந்த வகையிலும் அடங்காத தங்களை அமெரிக்கா ராஜாங்கம் அழைத்திருப்பதன் அரசியல் அர்த்தத்தை தார்ப்பரியத்தை புரியாது புலம்பும் நம்மவர் பற்றி அலட்டிக் கொள்ளாது வருக
தெரியாமல் செய்யும் பிழைகள் மன்னிக்கப்பட வேண்டியவை. பாவம் அவர்கள் எதையுமே அறியாதவர்கள்
ஜவகர்லால் நேரு ஒரு தடைவ சொன்னார்….எதிரிகளுடன் நாங்கள் கைலாகு கொடுத்துப் பேசுவதானால் எங்களின் எதிரியின் கைகளில் ஒன்றையாவது தடுக்கப்படும் என்று
அரசு மட்டுமல்ல அமைப்புக்களும் கட்சிகளும் இனங்களும் உலகத்துடன் தொடர்புடனேயே இருக்க வேண்டும்.
உலகுடன் தொடர்பிலிருந்து ஒரு அன்ரன் பாலசிங்கம் மறைந்ததும் உலகுடன் தொடர்புடனிருந்த தமிழச் செல்வனையும் தட்டி விட்டே எதிரிகள் தங்கள் நாடகத்தை முள்ளிவாய்க்கால் வரை தள்ளிச் சென்றனர்
இன்று தாயக தமிழ் வாக்காளரின் விவேகமும் துணிச்சலுமுள்ள வாக்குக்களே தங்களை இன்று அnரிக்காவிற்கும் கனடாவிற்கும் அனுப்பி வைத்துள்ளது
இந்த அமெரிக்க ஈழத் தமிழர் தொடர்பின் தொடக்கத்தை வரலாற்றுத் தொடர்பாக ஆவது விசுவாசமும் நம்பிக்கையுமுள்ள நட்பாக இல்லாவிடினும் தொடர்பாக ஆவது பேணும் குறைந்த பட்ச அறிவாவது நமக்கு இருக்க வேண்டும் தொடர வேண்டும் என்று பிராரத்திக்கிறேன்.
சிறு குச்சியும் உதவும் என்ற நிலையில் சண்முகதாசன் தொடங்கிய சீனக் கம்மினியூஜ்ற் கட்சியை நhங்கள் கோட்டை விட்டதைப் போல் இந்த அமெரி;க்க தொடர்பை பேண ஆவது தாங்கள் வாழ வேண்டும் தேசியக் கூட்டமைப்பு வாழ வேண்டும்
எங்கள் தியாகிகள் மத்தியில் கடாபி கஸ்றோ என்ற பெயரில் எல்லாம் ஆட்கள் இருந்தார்கள் ஆனால் அவர்களில் எவருடனும் தொடர்பை கொள்ளும் ஆற்றலும் அறிவும் வெளிநாட்டில் வேலை செய்தவர்களிடம் இருக்கவில்லை
கடாபியும் கஸ்றோவும் ஏன் விடுதலையை போராடிப் பெற்ற வியட்னாமையும் பங்களா தேஜையும் கூட நம் பக்கம் வைத்திருக்க வெளிநாட்டிலிருந்த எங்களால் அன்று முடியவில்லை காரணம் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை யாருடனும் பேசவில்லை உலகத் தொடர்புகளை தோற்றுவித்துப் பேணவில்லை
உள்நாட்டு முடிவிற்கு இந்த வெளிநாட்டுச் செயற்பாடுகளும் அறியாமையையும் தான் காரணம் என்பதே வரலாற்று முடிவாக பதியப்படும்.
ஜனநாய மார்க்த்தால் வருவோரை மட்டும் உலகம் ஏற்கிறதை உணர்ந்து வெளிநாடுகளிலும் தேசியக் கூட்டமைப்பின் கிளைகளை ஸ்தாபித்து முறைப்படி காலப்போக்கில் தேர்தல்களை நடாத்தி சுயமாகச் சிந்திக்கவும் சர்வ தேச அரசியலை புரிந்து கொண்டவர்களையும் மட்டும் வேட்பாளராக்கி தொடரவுள்ள பணிக்கான அத்திவாரத்தை கனடாவில் இட்டுச் செல்ல ஆவது சம்பந்தரே வருக
பூநகரான் குகதாசன் கனடா
kuha9@rogers.com


No comments:
Post a Comment