
புதன் கிழமை(02.11.2011) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது தமிழ் மாணவனான அகரன் மஞ்சள்வரி வீதிக்கடவையில் வைத்து ஒரு பார ஊர்தி அவர் மீது ஏறியதால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிகழ்வினால் பேர்ன் மாநிலத்திலுள்ள இட்டிகன் என்ற கிராமமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.
அகரன் கல்விகற்கும் பாடசாலை அதிபர் கூறுகையில் ‘விபத்து நடைபெற்ற இடத்திற்கு தான் உடனடியாகச் சென்றபோது கண்ட காட்சி மிகக் கொடூரமானது. அதைவிட கொடூரம் என்னவென்றால் தற்செயலாக அவ்விடத்தால் சென்றவர்கள், அவ்விடத்தில் நின்றவர்கள், பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவர்கள் அந்த கொடூரத்தை நேரடியாக பார்க்க நேர்ந்தது தான்’ என்றார்.

அகரன் சில நாட்களுக்கு முன்னர் தான் தனது 8 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். அவரது தந்தையார் கூறும்போது ‘தனது மகனை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதை நிறுத்தும்படி பாடசாலை நிர்வாகம் ஆலோசனை வழங்கியிருந்தது என்றும் வீதியில் செல்லும்போது தனது மகனை வாகன சாரதிகள் இலகுவில் அடையாளம் காண்பதற்காக சிவப்பு நிறத்தில் பாதணிகளை அணிவித்திருந்ததாகவும் அப்படியிருந்தும் இந்த கோரச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது’ என்றும் மிகவும் மனவேதனையுடன் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் ‘போதுமான அளவு பாதுகாப்பு மாணவர்களுக்கு செய்யப்பட வேண்டும் அதோடு விபத்து நடந்த அந்தப் பகுதியில் போதுமான அளவு எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டிருந்திருந்தால் எனது மகன் இன்னமும் உயிருடன் இருந்திருப்பான்’ என்றார்.
அகரன் கல்விகற்கும் பாடசாலை அதிபர் கூறும்போது, ‘பாடசாலையைப் பொறுத்தவரையில் பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வருவது பற்றி தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை, ஆனால் வாகனங்களில் கூட்டி வருவதை தாம் விரும்பவில்லை’ என்றார்.
நன்றி 20 நிமிடம்.http://www.20min.ch/news/bern/story/Zehnjaehriger-auf-Zebrastreifen-totgefahren-26885102


No comments:
Post a Comment