
திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இருவரைக் கைது செய்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பிள்ளையின் தந்தையான அகிலரூபன்(வயது-23)பட்டித்திடல்,தோப்பூர் பகுதியைச்சேர்ந்தவரும்; சுப்பரமணியம் சிறிகாந்தன்(வயது-20)கல்லடி,மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்தவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
கடந்த 26ம் திகதி கோயிலுக்கு செல்வதற்காக ஆறு பேர்கள் சென்றதில் மூவர் வீடு திரும்பவில்லை.அதனையடுத்து பெற்றோர்கள் தேடுதல்களை நடாத்திய வேளை சிறுமிகள் மீட்கப்படவில்லை.அதனையடுத்து 28ம் திகதி சேறுநுவர பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைபாட்டினையடுத்து பொலிஸார் தேடுதல்கள் நடாத்திய போது கிளிவெட்டி,பட்டித்திடல் பகுதியிலுள்ள மூதாட்டியின் வீட்டொன்றில் இருந்து தர்சினி (வயது-14), வினித்தா (வயது-15), யதுசாந்தினி (வயது-15) ஆகியோரே மீட்கப்பட்டவர்கள் ஆவர்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரிடம் தங்களை விருப்பமின்றி அழைத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக மேற்படி சிறுமிகள் தெரிவித்தனர்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை உறுதிப்படுத்துவதற்காக திருமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்தியரின் அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளின் முறைப்பாட்டினையடுத்து இருவரைக்கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்திய வேளை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment