
இலங்கையைச் சேர்ந்த 30 பேருக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.குறித்த இலங்கைப் பிரஜைகள் பாரியளவு நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆறு பேர் பெண்கள் எனவும், இரண்டு வர்த்தகர்கள், ஒரு சட்டத்தரணி உள்ளிட்டோருக்கு எதிராகவும் சார்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 பேரில் பதினாறு பேர் சிங்களவர்கள் எனவும், குருணாகால், கொழும்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் போதைப் பொருள் வர்த்தகர்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.


No comments:
Post a Comment