கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது. என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.இந்த உடன்படிக்கையின் முக்கிய சரத்துக்கள் வெளிவராதபோதும் உடன்படிக்கையின் பிரதிநிதிகள், தூதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் அமெரிக்க தூதரகத்துக்கும் ஒரு பிரதி வழங்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையில் வடக்கு கிழக்கு இரண்டு பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய மற்றும் பிராந்திய அரசுகளுக்கு இடையில் தேசிய பாதுகாப்பு, நிதி, குடிவரவு போன்ற விடயங்கள் தவிர ஏனைய விடயங்களில் அதிகார பரவலாக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
அத்துடன் வடக்குகிழக்கில் இராணுவமயத்தை இல்லாதொழித்தல், மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கு உரிய புனர்வாழ்வளிப்பு, அவசரகால சட்டத்தை நீக்குதல், உட்பட்ட பல்வேறு உடன்பாடுகளும் இதில் அடங்கியிருந்தன.
மஹிந்த ராஜபக்ச தமிழர் விடயத்தில் உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதன் காரணமாகவே தாம் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாக ஆர். சம்பந்தன், அமரிக்கா தூதர் பற்றிசீயா புட்டினிஸிடம் தெரிவித்துள்ளார்.
இதனை புட்டினிஸ் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.


No comments:
Post a Comment