ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் உரிமைகாக்க, மூன்று தமிழர் உயிரைக் காக்க, கோவை மாநகரில், சிதம்பரம் பூங்காவில் வருகின்ற 6ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு, நடைபெறவுள்ளது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர், பழ. நெடுமாறன் இதற்கு தலைமை தாங்குகிறார். ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர் ரான்ரைட்னர், ஐக்கிய நாடு அவையின் வல்லுநர்குழு அறிக்கையை வெளியிடவுள்ளார்.
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற இலங்கைக்கு வரிந்து கட்டிக்கொண்டு இந்திய அரசு வேலை செய்கின்றது. அதனால்தான், 2013 ம் ஆண்டு இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் கூறியுள்ளார்.
கோவையில் நடக்கும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கு ஏற்பது, நமது முழு முதல் கடமை. அணி திரண்டு வாருங்கள் தமிழர்களே என அழைக்கின்றேன். மரண இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் தவிக்கும் ஈழத் தமிழருக்கு வாழ்வுரிமை வெளிச்சத்தைக் காட்ட கோவையில் திரண்டிடுவோம்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.


No comments:
Post a Comment