தீபாவளி பந்தயத்தில் வேலாயுதத்துடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் 7ஆம் அறிவு படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும் தற்போது வரை சூர்யாவின் 7 ஆம் அறிவு திரைப்படம் வசூல் ரீதியாக சிறப்பாகவே உள்ளதாம்.
தற்போது 7ஆம் அறிவு திரைப்படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கும் மாற்றான் திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா இப்படத்திற்கான சம்பளமாக தெலுங்கு உரிமையினையும் சேர்த்து 24 கோடி இந்திய ரூபாவினை சம்பளமாக பெற்றுள்ளாராம்.
கஜினியை தொடர்ந்து சூர்யாவின் திரைப்படங்கள் பல தெலுங்கில் வெற்றி பெற்றதனால் அங்கு அவருக்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனால் மாற்றான் திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை மிகப்பெரும் தொகைக்கு விற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலிவூட்டில் தற்போது ரஜினியை அடுத்து கூடுதலான தொகை சம்பளம் பெறும் நடிகரா சூர்யாவே உள்ளார். இத்தொகையானது அஜித், விஜய் ஆகியோரை விட சுமார் 10 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment