திமுகவின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மதுரை நகர் மாவட்ட செயலாளர் தளபதி இருவரும் இந்த விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இருவரும் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏக்கள்.
இவ்விழாவில் வைகோ பேசும்போது,
’’ஒரு காலத்தில் தேவர் ஜெயந்திக்கு, நான் திமுகவில் இருந்த போது மன நிறைவோடு சென்று அஞ்சலி செலுத்தினேன். தொடர்ந்து 36 ஆண்டுகளாக தேவர் ஜெயந்திக்கு சென்று முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் ஒரே அரசியல் தலைவன் நான் தான்.
93ஆம் வருடம் எனக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்தேன். ஆனால், அக்டோபர் 3ஆம் தேதி என் தலைக்கு மேல் கத்தி தொங்கும் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது.
கோவையில் நடந்த பொதுக்கூட்டம்தான் நான் திமுகவில் பேசிய கடைசி கூட்டம். இது எல்லாம் மலரும் நினைவுகளாக இன்றும் இருக்கிறது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். கடந்த 96ல் இருந்து சோதனைகளில் சிக்கியது மதிமுக. 2001ல் தனித்து போட்டியிட்டும், 2011ல் தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு மதிமுக தள்ளப்பட்டது.
ஆனால் தேர்தலை புறக்கணித்ததால் கட்சிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் சில நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டார்கள். சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அவர்களைப்பற்றி கவலைப்படவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிட்டிருந்தால் 12 எம்.எல்.ஏக்களை பெற்றிருக்கும்.
தமிழகத்தின் எதிர்காலத்தை மதிமுகவால்தான் காப்பாற்ற முடியும். எனக்கு பதவி ஆசை இல்லை. அதனால் நான் துறவியும் இல்லை. மதிமுகவிடமும் என்னிடமும் பண வசதியும் இல்லை.
இனி வரும் காலத்தில் மக்கள் பணியாற்ற மதிமுகவினர் தயாராக இருக்க வேண்டும்.விரைவில் தமிழக மக்கள் மதிமுகவிற்கு வெற்றி மகுடம் சூட்டுவார்கள். அந்த நாள் வரும்’’ என்று உருக்கமாக தெரிவித்தார்.


No comments:
Post a Comment