
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தற்போது முன்னெடுக்கப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான முயற்சிக்கும் இலங்கைத் தீவின் சமூகங்களிடையேயான மீள ஒன்றியணையும் முயற்சிக்கும கனடா என்றுமே காத்திரமான பங்கை வழங்கும் என கனடியத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறப்பட்டுள்ளது.கனடாவினால் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்ட முதலாவது விஜயமாக அமைந்த இந்த விஜயத்தின் போது கனடாவின் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடாத்தியதுடன், வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நிறைவேற்றுக்குழுக்களில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதானிகளையும் மேற்படி குழுவினர் சந்தித்தனர்.
கனடாவில் இரண்டு நாட்களே தங்கியிருந்த இக் குழுவினர் ஒரு தினத்தை மேற்படி கனடியத் தலைநகர் சந்திப்புக்களில் செலவளித்தனர்.
மேற்படி குழுவினர் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் முடிந்த பிற்பாடு ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தமிழர்களிற்கான குரலாகச் செயற்பட்டு வரும் கன்சவெட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் மற்றும் ஈழத்தமிழர்களிற்கு பரிச்சயமான பாராளுமன்ற உறுப்பினரான பார்ம் கில் ஆகியோருடன் கனடிய மனிதவுரிமை மையத்தால் செய்யப்பட்ட சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்
இச் சந்திப்பில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சிறீலங்காவின் மனிதவுரிமைக்கு எதிரான செயலுக்குத் தாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் தமிழர்களிற்கு சமாதான முறையிலான தீர்வொன்றிற்கான அழுத்தத்தைக் கொடுப்போம் என்றும் தெளிவுபடக்கூறினர்.
கனடிய மனிதவுரிமை மையத்தால் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தோடு லிபரல் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதும் அமெரிக்காவிற்கு திரும்பிச் செல்லவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான நேரப்பற்றாக்குறை காரணமாக அச்சந்திப்புக்கள் இடம்பெறவில்லை


No comments:
Post a Comment