
02.11.2011 புதன்கிழமை அன்று நோர்வேயில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வம் உட்பட ஆறு மாவீரர்களுக்கும் வீரவணக்கநிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகவை பேதமின்றி தமிழ்மக்கள் கலந்து கொண்டு காலத்தால் அழியாத மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
அத்தோடு இந்நிகழ்வில் பாடல்கள் பாடி கவிதை மொழிந்து புன்னகை அழகனுக்கு தமிழ் பாவால் பாமாலை சூட்டினர்.இனத்தின் விடியலுக்காக அயராது உழைத்து உலகமெங்கும் உரிமைகீதம் பாடித்திரிந்த சமாதானப்புறாவின் வீரம் செறிந்த வாழ்வின் வரலாறும் வெண்திரையில் விரிந்தது.
இறுதியாக மாண்ட வீரரின் கனவு பலிக்க ஒன்றிணைந்து பணியாற்றி கொண்ட கொள்கை குன்றிடாத தலைவன் காட்டிய வழியில் தமிழரின் தாகத்தை தீர்க்க பாடுபடுவோம் என்ற நம்பிக்கை வரிகளோடு நிகழ்வு நிறைவுக்குவந்தது.





No comments:
Post a Comment