சோமாலியத் தலைநகர் மொகடிசுவிற்கு அருகில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்க அமைச்சுக்கு அருகில் சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் டிரெக் வண்டியொன்றிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்த அந்நாட்டவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் 70க்கும் மேற்பட்டோரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும் அடங்குவதாகவும் பெருமளவான சடலங்கள் எரிந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


No comments:
Post a Comment