
திமுக, அதிமுக என்ற கட்சிக் கரைகளைக் கடந்து, தங்களின் வசிப்பிட சூழல், அந்தப் பகுதி மக்களுக்கு எது சரி என்பதையெல்லாம் உணர்ந்து ரஜினி ரசிகர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தலில், சைதை பகுதியைச் சேர்ந்த மன்றப் பொறுப்பாளரான சைதை ரவி, தனது ஆதரவை சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிடும் சைதை துரைசாமிக்கு தெரிவித்துள்ளார்.
சைதை ரவியுடன் உள்ள ஏராளமான ரசிகர்களும் துரைசாமிக்கே தங்கள் ஆதரவு என்றதோடு, களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் ரஜினியைச் சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கோரியுள்ளார் சைதை துரைசாமி.
முன்னொரு சந்திப்பில் ரஜினி -சைதைதுரைசாமி


No comments:
Post a Comment