
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்கு, பில்கேட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொழில் நுட்ப சாதன தயாரிப்பில் புகழ் பெற்றதாகும். 1976ல் தமது நண்பர் வோஸ்னியாக்குடன் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். உடல்நலக்குறைவுக் காரணமாக ஆப்பிள் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஆகஸ்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் விலகினார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த 56 வயதான ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழந்ததாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர் பில்கேட்ஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஸ்டீவ் ஜாப்ஸூடன் இணைந்து பணியாற்றி அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன், நவீன கணினி புரட்சியினை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸை, இந்த உலகம் இழந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அவரை முதன்முதலாக சந்தித்தேன் அன்று முதல் இருவரும் நல்ல நண்பர்களாகினோம். ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.


No comments:
Post a Comment