அமெரிக்காவில் உள்ள மக்டோனால்ஸ்சின் வாசலில் அதிலும் சனப் பிழக்கம் அதிகமாக உள்ள இடம் ஒன்றில் வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. சுட்டவர் வயது 18 முதல் 21 வரை இருக்கலாம் எனவும் இந் நபர் ஏற்கனவே இந்த உணவகத்தினுள் தனது துப்பாக்கியை மறைத்துவைத்துக்கொண்டு சென்றதையும் பாதுகாப்புக் கமரா துல்லியமாகப் படம் பிடித்துள்ளது.
ஏற்கனவே பிறிதொரு இடத்தில் 18 வயது நபர் ஒருவர் மற்றுமொருவரோடு சூடான விவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் விவாதத்தில் ஈடுபட்ட நபர் அவரை மக்டொனால்சுக்குச் செல்லுமாறு கூறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மக்டொனால்சுக்கு வெளியே தயாராக இருந்த நபர் தனது துப்பாக்கியுடன் உள்ளே சென்று அவரை சுட முயற்ச்சித்தவேளை அவர் வெளியே ஓடிவந்துள்ளார். இருப்பினும் சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்று கூடப்பாராமல் துப்பாக்கிதாரி 18 வயது இளைஞனைச் சுட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் 18 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் ஆயுதக் கலாச்சாரம் அமெரிக்காவில் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் சில கடைகளில் தேவையான துப்பாக்கிகளை பொதுமக்கள் வாங்க முடியும். அங்கே இயந்திரத் துப்பாக்கிகளும் கிடைக்கும் என்பது பலர் அறிந்திராத விடையமாகும்.
அதிர்வு
காணொளி இணைப்பு


No comments:
Post a Comment