
திருமணம் ஆகாத பெண் இறந்துவிட்டதால் அக்குடும்பத்தில் உள்ள 10 பேர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் மஜ்ராவை அடுத்த படேல் நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், டேராடூன் அருகே உள்ள டாக் பத்தார் என்ற சுற்றுலா இடத்துக்கு சென்றனர். அங்கு அந்த குடும்பத்தினர், தங்களுடைய 6 குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்தனர்.
பின்னர் அருகே உள்ள கால்வாயில் குழந்தைகளை தூக்கி போட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த குழந்தைகளின் பெற்றோர்களும் தூக்க மாத்திரைகளை தின்று விட்டு, தண்ணீரில் குதித்தனர்.
இதனால் அனைவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இவர்களில் சிலரது உடல்கள் கரையில் ஒதுங்கின. சிலரது உடல்கள் கால்வாயில் மூழ்கி விட்டன.
இது குறித்து அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், ’’எங்கள் குடும்பத்தில் திருமணம் ஆகாத பெண் ஒருத்தி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து 10 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்’’என்று கூறியுள்ளார்.


No comments:
Post a Comment