
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மனைவி (23). கடந்த 1ம் தேதி இரவு இவர்களது குடிசை வீட்டில் கணவன், மனைவி இருவரும் தூங்கினர். இரவு 11 மணியளவில் மர்ம நபர்கள் யாரோ கதவை தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு தொழிலாளி கதவை திறந்தார்.
அப்போது வெளியில் நின்றிருந்த 3 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து அவரை சரமாரி தாக்கியுள்ளனர். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும், இளம்பெண்ணை பைக்கில் கடத்திச் சென்றனர்.
செங்காடு ஏரிக்கரையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ‘இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம்’ என அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து இளம்பெண் வாலாஜா போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ராணிப்பேட்டை டிஎஸ்பி லாவண்யா, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற் றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலாஜா அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்த வெங் கடேசன்(30), பிச் சாண்டி(30), மனோ கரன்(40) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment