
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் ஊடறுப்பு நடாத்தப்பட்டுள்ளதாக உடைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது.விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களின் ஒன்றாக அன்று செயற்பட்ட அனைத்துலக செயலகத்தில் ஊடகங்களுக்கான இணைப்பாளராக விளங்கிய நந்து என்று அழைக்கப்படுகின்ற நந்தகோபன் என்ற நபர் ஊடாகவே இந்த மின்னஞ்சல் உடைப்பை சிங்கள புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ளதாக அந்த சிங்கள நாளேட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினர் மேற்கொண்டிருந்த இராஜதந்திர தொடர்புகள் மற்றும் பிற தொடர்பாடல்கள் – தொடர்புடையவர்கள் என அனைத்து தகவல்களையும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை இதனூடாக திரட்டியுள்ளது.
குறிப்பாக புலிகளோடு தொடர்புடைய இராஜதந்திரிகளை மட்டுமல்ல அரசியல்துறையோடு தொடர்புடைய புலம்பெயர் விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்துள்ளது.
பிரான்சில் இருந்து ஈழமுரசுலீக்ஸ் எனும் பெயிரில் வெளிவரும் பத்திரிகைத் தொடரானது பா.நாடேசன் அவர்களுடைய மின்னஞ்சல் பரிமாற்றங்களை அடிப்படையாக கொண்டே எழுதப்பட்டு வருவதாக அந்த சிங்கள நாளேடு குறிப்பிட்டுள்ளது.
தங்ளது கட்டுப்பாட்டில் உள்ள கே.பியை எந்த அடிப்படையில் மனிதாபிமானப் பணிகளுக்கு சிறிலங்கா அனுமதித்துள்ளதோ – அதேபோன்றே நந்தகோபனையும் தொடர்ந்தும் ஊடங்களுக்கான இணைப்பாளராகவே தொடர்ந்தும் இயங்க விட்டுள்ளது.
இந்தவகையில் நந்தகோபன் ஊடகவே சிறிலங்காப் புலனாய்வுத்துறை பா.நடேசனின் மின்னஞ்சல் தகவல்களை வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மைக்கு புறம்மான சோடிப்புக்களுடன் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தீங்கிழைக்கின்ற வகையிலேயே ஈழமுரசுலீக்ஸ் தொடர் வெளிவருகின்றமை இதற்கு போதுமான சாட்சியாக உள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழக ரெஜியின் ஊடாக போர் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு தயாரென விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தமிழீழ அரசென்ற கொள்கைக்கு குறியீடாக இன்று விளங்கி வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்து வருகின்ற அங்கீகாரம் ஆகிய மேற்குறிப்பிட்ட விடயங்கள் சிறிலங்கா அரசுக்கு இராஜதந்திர நெருக்கடியை கொடுத்துவரும் நிலையில் இதனை சீர்குலைக்கின்ற வகையில் ஈழமுரசுலீக்ஸ் தொடரில் எழுதப்பட்டு வருகின்றமை சிங்களத்தின் பின்னணியை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
எவ்வாறு அமெரிக்க அரசின் தகவல்களை விக்கிலீக்ஸ் ஊடறுத்து களவாடியமையை அமெரிக்காவில் தேசத் துரோகமாக பார்க்கப்படுகின்றதோ அதுபோலவே விடுதலைப் புலிகளின் உயர்நிலையின் மின்னஞ்சல் தகவல்களை ஊடறுத்து களவாடிய தகவல்களை ஈழமுரசுலீக்ஸ் என வெளியிடுவதும் தேசத் துரோகம்தான் என்பது ஈழவிடுதலை செயற்பாட்டாளர்களின் கருத்தாகும்.


No comments:
Post a Comment