இதன் ஒரு அங்கமாக இன்று (28-06-2011) மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது.
The Kia Oval, Kennington, London, SE11 5SS என்ற முகவரியில் அமைந்துள்ள ஓவல் மைதானத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற இருக்கின்றது.
தமிழின அழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சனத் ஜயசூரிய நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கலந்துகொள்ள இருக்கின்றார்.
இன அழிப்பு மேற்கொண்ட அரசாங்கத்தை நீதியின் முன் நிறுத்தும் ஒரு அங்கமாக சிறீலங்கா கிறிக்கெட் அணியையும், அதன் வீரர்களையும் பிரித்தானிய அரசாங்கமும், ஏனைய மேற்குலக நாடுகளும் புறக்கணித்து, தடை விதிக்க வேண்டும் என தமிழ் இளையோர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
சிறீலங்கா கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி கடந்த 25ஆம் நாள் லண்டனிற்கு வெளியேயுள்ள பிறிஸ்ரல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர், அதற்கு முன்னதாக கடந்த மே மாதம் கார்டிஃப், லோர்ட்ஸ் போன்ற பல இடங்களில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு:
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு
தொலைபேசி: 075 3944 4824


No comments:
Post a Comment