
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேறியுள்ள மக்களின் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்..
குறிப்பாக கிளிநொச்சி நகரபகுதியில் அண்மையகாலங்களில் திருட்டுசம்பவங்கள்அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.படையினர் அதிகளவு நடமாட்டம் மிக்கபகுதிகளில் ஆலயங்களில்கூட திருடடுசம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதுதொடர்பாக மக்கள் சிறீலங்கா காவல்துறையினருக்குமுறையிட்டும் காவல்துறையினர் இதுதொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கவலைவெளியிட்டுள்ளார்கள்
அதேவேளை கிளிநொச்சிச பகுதியில் சட்டவிரோத செயல்கள் அதிகரித்து செல்வதால் அவர்களிடம் இருந்து கையூட்டுப்பெற்றுக்கொள்ளும் நடவடிகக்கையில்தான் காவல்துறையினர் முனைப்புடன் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:
Post a Comment