
இசைக்கல்லூரி ஒன்றில் பணிபுரியும் 32 வயதுடைய நபர் ஒருவர், பொது இடத்தில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலாஸ் சார்கோஸியின் கொலர் சட்டையை பிடித்து இழுத்த வீடியோ காட்சி புதிய சென்சேஷனலை உருவாக்கியிருக்கிறது
பிரான்ஸின் தென்மேற்கில் பிராக்ஸ் எனும் இடத்திற்கு நிகோலாஸ் சார்கோஸி விஜயம் செய்தார்.
அப்போது, பொதுமக்களிடையே கைகொடுத்து வந்த அவரை, திடிரேன குறித்த நபர் சட்டையை பிடித்து இழுத்தார். உடனடியாக அதிபரின் மெய்பாதுகாப்பாளர்கள் அவர கிழே வீழ்த்தி தாக்கினர்.
பின்னர் காவற்துறையினர் கொண்டு சென்றனர். சார்கோஸி மீது சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் அளவுக்கு அவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை.
முன்னதாக அதிபர்கள் மீது செருப்பு தான் வீசுவார்கள். அது பழசாகிவிட்டதோ என்னவோ.. இப்போது இந்த உக்தியை இவர் தொடங்கியிருக்கிறார். எத்தனை பேர் இதை பின் தொடர போகிறார்களோ தெரியவில்லை
2007ம் ஆண்டு பிரான்ஸ் அதிபரான சார்கோஸிக்கு மக்களிடையே இருந்துவந்த செல்வாக்கு குறையத்தொடங்கியுள்ள போதும், அடுத்த வருடம் நடைபெறும் அதிபர் தேர்தலிலும் அவர் போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.


No comments:
Post a Comment