மேலும், நம்பகரமான விசாரணையை முன்னெடுக்கத் தவறினால் சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
யுத்தகுற்றச்சாட்டுகள் மற்றும் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் முன்னர் நடத்தப்பட்ட உள்ளக விசாரணைகள் முழுமை பெறாமல் தோல்வியடைந்ததாகவும், அத்தகைய விசாரணை அறிக்கைகள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும், ஒருவருக்கேனும் தண்டனையை கொடுக்கப்படவில்லை என்றும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதுபோன்றே மீண்டும் நடந்தால், அனைத்துலக சமூகத்தின் தலையீட்டின் மூலம் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நவநீதம் பிள்ளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயற்படும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.
யுத்தகுற்றங்கள் தொடர்பாக இலங்கை விரைவான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கடந்த செவ்வாயன்று அமெரிக்கா வலியுறுத்தியிருந்த நிலையிலேயே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.


No comments:
Post a Comment