
கிளிநொச்சியில் தாங்கள் நிலைகளுக்கு ஏற்றவாறும் வசதிகளுக்கு ஏற்றவாறும் மக்களின் காணிகள் மற்றும் பொது இடங்களில் படையினர் படைமுகாம்களை அமைத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களைபோன்று கம்பிசுறுள்களை போட்டு நிலைகொண்டுள்ளார்கள்.
இன்னிலையில்தான் கிளிநொச்சி நகரில் உள்ள முருகன் ஆலயத்தின் கட்டங்களில் நிலைகொண்டுள்ள படையினரை விலக்கி கட்டங்களை மீட்டுத்தர ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.முருகன் ஆலயத்தின் கிணறு,கழிப்பறைகூடங்கள்,அன்னதான மடம் குருக்கள் மடம் போன்றவற்றில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள் இதனால் ஆலய வழிபாட்டிற்கு இடையூறுஉள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


No comments:
Post a Comment