
விடுதலைப் புலிகளினால் திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டுள்ள தொண்ணூறு கோடி ரூபாவை தேடிப்பிடிக்கும் முயற்சியில் பாதூகப்புத்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் திருகோணமலை மாவட்டத்தில் பலமாக இயங்கிய காலப்பகுதியில்
அதனை பிளாஸ்டிக் கொள்கலன்களில் இட்டு தம்பலகாமத்தை அண்மித்துள்ள சூரங்கல் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்துவைத்துள்ளதாக கிடைத்துள்ள இரகசியத் தகவலொன்றையடுத்தே அதனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை பொலிசாருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தை விடுவிக்கும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பினர் அந்தளவு பாரிய தொகைப் பணத்தை பூமிக்கடியில் புதைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரஸ்தாப பணத்தொகையைப் புதைத்து வைப்பதில் முக்கிய பங்காற்றிய விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மூவரில் இருவர் இராணுவத்தினருடனான மோதல்களின் போது கொல்லப்பட்டுவிட்டனர். மற்றொருவர் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார் என்றும்


No comments:
Post a Comment