
பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற ஆவணப்படத்தை நேரம் கிடைக்கும் போது ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் பார்வையிடுவார் என்று அவரது பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்வையிட்டாரா என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தை ஐ.நா பொதுசெயலாளர் பான் கீ மூனுடன் பகிர்ந்து கொண்டதாகவும், நேரம் கிடைக்கும் போது அவர் அதனைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 5 ஆம் திகதி பான் கீ மூனை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment