
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்து அந்த காணொளிகளை தமிழர்களுக்கு போர்க்குற்ற ஆதாரமாக பயன்படுத்திவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவத்தினர், தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் போராளிகளை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று காட்டுப் பகுதிகளில் வைத்து அவர்களை சுட்டு கொலை செய்து வீடியோ எடுத்து அவற்றினை இலங்கை அரசு செய்த போர்குற்ற நடவடிக்கை எனக்கூறி தமிழர்களிற்கு பல லட்சம் ரூபா பணத்திற்கு விலை பேசி விற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த அதிர்ச்சி தகவல்கள் இராணுவத்தரப்பு வட்டாரங்களில் இருந்தே கசிந்துள்ளது. இவ்வாறு அண்மையில் பெண் போராளிகள் அணி ஒன்று சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.


No comments:
Post a Comment