யுத்தக் குற்றம் குறித்து தனது நிலைப்பாட்டினை இலங்கை விரையில் வெளியிட வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்துள்ளது. அவ்வாறு நிலைப்பாட்டினை வெளிப்படுத்த தவறும் பட்சத்தில் சர்வதேச நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை அதிகாரிகள் பொறுப்பை உறுதி செய்வதில் முதன்மை பொறுப்பை கொண்டிருந்தமையினால், அமெரிக்க சர்வதேச விசாரணைக்காக அழைப்பினை சிறிதுகாலம் நிறுத்தி வைத்திருந்தது.
இலங்கை அரசின் சமரசத்திற்கான கடமைகளை விரைவில் நீருபிக்க தாம் இலங்கை அரசை தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அரசி அக் கடமைகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாகவும் ஆனால் முன்னெடுக்க தவறும் பட்சத்தில் அழுத்தங்கள் அதிகரித்து சர்வதேச சமூகம் வேறு ஏதேனும் ஒருமுறையை ஆராய நேரிடும் எனவும் அவதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 வீடியோ காட்சி வெளியாகியதிலிருந்து இலங்கை மீதாக சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment