
யாழ்-அளவெட்டியில், தமிழ் தேசிய கூட்டடைப்பின் பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவத்தை, அனைத்துலக அரசாங்கங்கள் மற்றும் அனைத்துலக அமைப்புக்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று (யூன்26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைச் செயலர் முருகையன் சுகிந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான அரசியல்வெளி இலங்கைத்தீவில் முற்றாக மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்மக்கள் வெளிப்படுத்த விளைகின்ற உணர்வுகளை-உரிமைககளை, சிங்கள மேலாதிக்க இராணுவக் கரங்கள்கொண்டு நசுக்க முனைகின்ற நிகழ்வாகவே, அளவெட்டிச் சம்பவத்தை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதுவதாக செயலர் முருகையன் சுகிந்தன் மேலும் தெரிவித்தார்.
தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்க தமிழ்மக்கள் மேற்கொள்கின்ற இத்தகைய சனநாயக முன்னெடுப்புகளை அச்சுறுத்தும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளை, அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் முகமாக நா.த.அசராங்கத்தின் அரசியல் வெளிவிவகார அமைச்சகம் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள நா.த.அரசாங்க பிரதிநிதிகள் ஊடாக அந்தந்த நாடுகளின் கவனத்துக்கு முதல்கட்டமாக கொண்டு செல்ல இருக்கின்றது.


No comments:
Post a Comment