
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக இலங்கை வந்துள்ள நெதர்லாந்து புலனாய்வு அதிகாரிகள், குமரன் பத்மநாதன் (கே.பி.) உட்பட்ட முன்னாள் புலிகள் இயக்க சந்தேக நபர்களான 13 உறுப்பினர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.புலிகளின் முன்னாள் பிரதான ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் தற்போது அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் விசாரணைகள் பல நாட்கள் நீடிக்கும் எனவும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடனேயே மேற்படி நபர்களிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் விசாரிக்கப்படுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்த தகவல்கள் எதனையும் வெளியிட முடியாது என நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்து நீதியமைச்சு விடுத்த கோரிக்கையின் பேரில் இவ்விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.


No comments:
Post a Comment